ஆட்டோவில் வந்திறங்கிய ஏ.ஆர். ரஹ்மான்

ar rahman comes in auto for Nagore Dharga

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 466ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாகூர் ஆண்டவர் எனப்போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆட்டோவில் வந்தார். மக்கள் கூட்டம்அங்கு அதிகம் இருந்ததால், பலத்த பாதுகாப்புடன் தர்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்கு சந்தனம் பூசும் நிகழ்வில் கலந்துகொண்டு பின்னர் அங்கிருந்து கிளம்பினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

ar rahman
இதையும் படியுங்கள்
Subscribe