Advertisment

”அவெஞ்சர்ஸ்ல இவர் நடிச்சால்தான் நல்லாருக்கும்...” - ஜாலி மூடில் ஏ.ஆர்.ரஹ்மான்

மார்வெல் நிறுவனத்தின் புகழ் பெற்ற அவெஞ்சர்ஸ் வரிசையில் அடுத்த பகுதியான 'அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம்' விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் ஹிந்தி மற்றும் தமிழ் டப்பிங் வடிவங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவெஞ்சர்ஸ் ஆன்தம் என்ற பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஆன்ட்ரியா, பாடலை எழுதிய விவேக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisment

rahman

விழாவில் ஏ.ஆர் ரஹ்மானிடம் நிருபர் ஒருவர், “நீங்கள் இந்திய சினிமாவில் பல சூப்பர் ஹீரோக்களுக்கு இசை அமைத்திருக்கிறீர்கள். இந்த மார்வெல் கதாபாத்திரத்தில் நம்ம ஊர் நடிகர்கள் யாராவது பண்ணிருக்கலாம் என்றால் யாரை சொல்வீர்கள்” என்று கேள்வி எழுப்புவார்.

Advertisment

அதற்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான், கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு அருகிலிருந்த விஜய் சேதுபதியை கை காட்டி, “இவர்” என்றார். அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தேன் என்றார். திடீரென ரஹ்மான் சொல்வதை எதிர்பார்க்காத விஜய் சேதுபதி, அப்போது ஆச்சரியமாக ரஹ்மானை பார்த்து சிரித்தார்.

avengers vijaysethupathi a.r.rahman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe