Advertisment

'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் !

இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' படத்துக்காக அவரது முத்திரை பதிக்கும் இசையை உருவாக்க கைகோர்த்துள்ளது மார்வெல் இந்தியா. ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஒரு புதிய கீதத்தை இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக உருவாக்கியிருக்கிறார்.

Advertisment

ar

இந்த பாடல் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் வெளிவர இருக்கும் 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது....

Advertisment

"என் சொந்த குடும்பத்திலேயே என்னை சுற்றி மார்வெல் ரசிகர்கள் சூழ்ந்திருப்பதால், அவெஞ்சர்ஸ்க்கு மிகவும் திருப்திகரமான மற்றும் பொருத்தமானவற்றை கொடுக்க அதிக அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. மார்வெல் ஆர்வலர்கள் மற்றும் இசை ரசிகர்கள் இந்த பாடலை ரசிப்பார்கள் என நம்புகிறேன்" என்றார். மேலும் மார்வெல் இந்தியா ஹெட் பிக்ரம் துக்கல் இதுகுறித்து பேசும்போது...''அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' ஒரு படம் மட்டும் அல்ல, இது இந்தியாவில் எல்லா இடங்களிலும் ரசிகர்களுக்கான உணர்ச்சிப்பூர்வமான ஒரு பயணம். ரசிகர்கள் மிகவும் விரும்பும் மார்வெல்லை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கொண்டாடுவது தான் சரியான வழி. ரசிகர்களின் அசாதாரண ஆதரவுக்கு நாங்கள் சிறிய அளவில் தெரிவிக்கும் நன்றி. தானோஸ் மூலம் நிகழ்வுகள் பாதி பிரபஞ்சமே அழிந்து விட, சூப்பர் ஹீரோக்கள் பலரும் மறைந்து விட, மீதமுள்ள அவெஞ்சர்ஸ் எடுக்கும் இறுதி முடிவு தான் இந்த 22 படங்களின் இறுதி படமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கெவின் ஃபைஜ் தயாரிக்க, அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோ இரட்டை இயக்குநர்கள் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்கள். லூயிஸ் டி'எஸ்ஸ்பிஸிடோ, விக்டோரியா அலோன்சோ, மைக்கேல் கிரில்லோ, டிரின் டிரான், ஜான் ஃபேவ்ரூ மற்றும் ஸ்டான் லீ ஆகியோர் நிர்வாக தயாரிப்பில் பணிபுரிந்துள்ளனர். கிறிஸ்டோபர் மார்கஸ் & ஸ்டீபன் மெக்ஃபீலி திரைக்கதை எழுதியுள்ளனர். ஏப்ரல் 26ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.

avengers
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe