AR Rahman appointed as Ambassador of 'India-UK' Grand Arts Festival

Advertisment

இந்தியாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர் ரஹ்மான். இந்திய மொழி படங்கள் மட்டும் அல்லது உலக நாட்டு மொழிகளில் சில படங்களில் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏ.ஆர் ரஹ்மான் இயக்கியுள்ள லீ மாஸ்க் (குறும்படம்) திரையிடப்பட்டது. இந்த படத்திற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனிடையே 'கலாட்டா கல்யாணம்' படத்திற்கு பிறகு தமிழில் 'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா', 'அயலான்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில் 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் கலாச்சார நிகழ்ச்சிக்கு ஏ.ஆர் ரஹ்மான் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டு நடைபெற்று வருகிறது. இதனை போற்றும் வகையில் பிரிட்டனும் இந்தியாவும் இணைந்து ஒரு கலாச்சார நிகழ்ச்சி நடத்தவுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு, தான் நியமிக்கப்பட்டதை, ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு தகவலை தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த நிகழ்ச்சி பல கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 1400 கலைஞர்களின் படைப்பை இந்தியா, பிரிட்டன், ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்படவுள்ளது. நாடகம், நடனம், காட்சி கலைகள், இலக்கியம், இசை, கட்டிடக்கலை வடிவமைப்பு, ஃபேஷன், தொழில்நுட்ப கலை போன்ற கலாச்சார பகிர்வுகளை பல்வேறு கலை வடிவங்களில் காட்சி படுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சி இந்தியாவில் இருக்கும் பிரிட்டன் கவுன்சில் மற்றும் இந்தியா, பிரிட்டன் இடையிலான நட்பை கலை, ஆங்கிலம் மற்றும் கல்வியில் வலு சேர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment