Advertisment

ஏ.ஆர். ரஹ்மானுடன் பிரார்த்தனை மேற்கொண்ட ரஜினி

ar rahman and rajinikanth visits Ameen Peer Dargah

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் கதாபாத்திர முன்னோட்ட வீடியோ கூட நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisment

இந்நிலையில், ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து தற்போது ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஆமீன் பீர் தர்காவிற்கு ரஜினிகாந்த் சென்றுள்ளார். தர்காவிற்கு ரஜினிகாந்த்துடன் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் சென்றுள்ளார்.

Advertisment

ஆமீன் பீர் தர்காவிற்கு பிரார்த்தனை செய்ய சென்ற ரஜினி மற்றும் ரஹ்மானுக்கு அங்கு சிறப்பு மரியாதைகளும் மாலைகளும் அணிவிக்கப்பட்டன. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ar rahman Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe