Advertisment

குடும்பத்துடன் முதல்வரை சந்தித்த ஏ.ஆர் ரஹ்மான் 

ar rahman and her family met tn cm mk stalin

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராகஇருக்கும் ஏ.ஆர் ரஹ்மான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அமீர் என்ற மகனும் கதீஜா, ரெஹிமாஎன்ற இரு மகள்களும் உள்ளனர். இதில் கதீஜாவுக்கும் தொழிலதிபரும் ஆடியோ இன்ஜினியருமான ரியாஸ்தீன் ஷேக் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம்நடைபெற்றது.

Advertisment

இதையடுத்து நேற்று முன்தினம்(5.5.2022) ஏ.ஆர் ரஹ்மான் மகள் கதீஜா மற்றும் ரியாஸ்தீன் ஷேக் ஆகியோரின் திருமணம் எளிய முறையில் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இத்தொடர்பானபுகைப்படத்தைஏ.ஆர் ரஹ்மான் சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில் மணமக்களுக்கு பலரும் தங்களின்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் திருமணமான தனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில்சந்தித்து ஏ.ஆர் ரஹ்மான் வாழ்த்து பெற்றுள்ளார்.

tamil cinema cm stalin ar rahman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe