Advertisment

“ஏ.ஆர். ரஹ்மானும் பாதிக்கப்பட்டுள்ளார்” - சந்தோஷ் நாராயணன்

ar rahman also victim in Maajja fiasco said by santhosh narayanan regards enjoy enjaami issue

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘தெருக்குரல்’ அறிவு, தீ ஆகியோரின் குரலில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான சுயாதீன ஆல்பம் ‘என்ஜாய் எஞ்சாமி’. இப்பாடலுக்கு ‘தெருக்குரல்’ அறிவு வரிகள் எழுதியிருந்தார். சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் யூட்யூப் சேனலில் இப்பாடலின் வீடியோ வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது வரை யூட்யூபில் 487 மில்லியன் பார்வையாளர்கள கடந்துள்ளது.

Advertisment

இப்பாடல் தொடர்பாக ‘தெருக்குரல்’ அறிவுக்கும், சந்தோஷ் நாராயணனுக்கும் சர்ச்சை இருந்தது. ஒரு பிரபல இதழில் ‘என்ஜாய் எஞ்சாமி' பாடல் குறித்து செய்தி வெளியான நிலையில், அதில் அறிவு பெயர் இடம்பெறாதது சர்ச்சையானது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவில், ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். அப்போது இப்பாடலை எழுதி அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இது தொடர்பாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப பின்பு அது சர்ச்சையானது. இது தொடர்பாக இருவரும் மாற்றி மாற்றி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

Advertisment

இந்த சூழலில் சந்தோஷ் நாராயணன் நேற்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில், இப்பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளதாகத் தெரிவித்து இதுவரை இப்பாடல் மூலம் 1 பைசா கூட வருமானம் வரவில்லை என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்த பாடலுக்கு நீங்க கொடுத்த அன்பிற்கு நன்றி. இந்தப் பாடலின் 100 சதவீத உரிமைகள், வருவாய்கள் மற்றும் ராயல்டிகளை நாங்கள் வைத்திருக்கிறோம். ஆனால் இப்பாடல் மூலம் நான், அறிவு, தீ ஆகிய மூன்று பேரும் இன்று வரை எவ்வளவு வருமானம் பெற்றுள்ளோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது நாள் வரையில் 1 பைசா கூட எங்களுக்கு வரவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம்.

இந்த அனுபவத்தால் நான் சொந்த ஸ்டுடியோவைத் துவங்கவுள்ளேன். சுயாதீன இசைக் கலைஞர்களுக்கு, தங்கள் படைப்புகளை வெளியிடுவதற்கும் வருவாயைப் பெறுவதற்கும் எந்த இடையூறும் இல்லாமல் எதுவாக இருந்தாலும் வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை. இதைப் பதிவிட காரணம், நான் சுயாதீன இசைக் கலைஞர்களுக்காக இருக்கிறேன். அவர்களின் வருவாயை உறுதி செய்வேன். எனது யூட்யூப் சேனல் வருமானமும் அந்த மியூசிக் லேபிளுக்கே செல்கிறது. இதைப் பொதுத் தளத்தில் சொல்ல விரும்பினேன். ஆனால் சுயாதீன இசைக் கலைஞர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்” என பேசினார். இது இசைத்துறையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதனை தொடர்ந்து மேலும் ஒரு பதிவிட்ட சந்தோஷ் நாராயணன், “என் பாசத்துக்குரிய ஏ.ஆர் ரகுமான் சார் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், இந்த மாஜா விவகாரத்தில் எப்போதுமே ஆதரவுத் தூணாகவே இருந்துள்ளார். அவரும் இந்த பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தீமைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிவு, தீ, நான் உட்பட யாரும் எங்களது வருமானத்தை இதுவரை பெறவில்லை. ஈமெயில்களால் ஏமாற்றப்பட்டுள்ளோம். உணர்ச்சிகள் அதிகமாக இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். இந்தத் தருணத்தில் சுயாதீன கலைஞர்களை ஆதரிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். எனது வழிகாட்டியான பா. ரஞ்சித் மற்றும் அறிவுடன் மீண்டும் பணி புரிவேன். அனைத்து இந்தியக் கலைஞர்களுமே விரைவில் அவர்களது நிலுவையைப் பெறுவார்கள்." என குறிப்பிட்டுள்ளார்.

enjoy enjaami santhosh narayanan ar rahman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe