/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/296_9.jpg)
உலகத்திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுசிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் மாதம் 12 ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான நாமினேஷன் பட்டியலைவெளியிட்டுள்ளது ஆஸ்கர் அமைப்பு.
இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் லிஸ்டில்இந்தியா சார்பில் சிறந்த சர்வதேச திரைப்படம்என்ற பிரிவிற்காகஅனுப்பப்பட்ட குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' படம் இடம்பெறவில்லை. இருப்பினும் தனிப்பட்ட முறையில் 15 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்ட ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படம் சிறந்த பாடல் என்ற 1 பிரிவில் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பெற்றது. இந்தியாவில் டெல்லியின்பின்னணியில் எடுக்கப்பட்ட ஆல் தட் பிரீத்ஸ் (All That Breathes) என்கிற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படங்களுக்கான பிரிவிலும், தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட இரு பழங்குடிகளைப் பற்றியஆவணப்படமான 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' (The Elephant Whisperers) ஆவணக் குறும்படப்பிரிவிலும் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் ஆஸ்கர் நாமினேஷன் லிஸ்டில்இடம்பெற்ற படங்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்கர் விருது பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வாழ்த்துக்கள் கீரவாணி. நிச்சயம் நீங்கள் ஆஸ்கர் விருதைசந்திர போஸுடன் வெல்வீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ரசிகர்கள் பலரும் 'ஆர்.ஆர்.ஆர்' படம் நிச்சயம் ஆஸ்கர் விருது வெல்லும் என பதிவிட்டு வரும் நிலையில் தற்போது ஏ.ஆர். ரஹ்மானும் பதிவிட்டிருப்பதுரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, சந்திரபோஸ் வரிகள் எழுதிய 'நாட்டு நாட்டு' பாடலுக்காகபாடலின்இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கருக்கு அடுத்த படியாக கருதப்படும் கோல்டன் க்ளோப் விருதைசமீபத்தில் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)