/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitlednyhn.jpg)
இந்தியாவின் பழம்பெரும் பிரபல பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். 90 வயதான பண்டிட் ஜஸ்ராஜ் 1930-ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தின் ஹிசார் பகுதியில் பிறந்தவர். பல இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள ஜஸ்ராஜ், பாலிவுட்டின் தவிர்க்கமுடியாத பாடகராகத் திகழ்ந்தவர். 2000-ஆம் ஆண்டு இவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. கரோனா ஊரடங்குக்கு முன்னர் அமெரிக்காவுக்கு சென்றிருந்த அவர், ஊரடங்கு காரணமாக அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையில், மாரடைப்பால் இன்று அவர் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பண்டிட் ஜஸ்ராஜ் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்.."உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் பண்டிட் ஜஸ்ராஜ். இந்திய பாரம்பரிய இசை அதன் பிரகாசிக்கும் நட்சத்திரங்களில் ஒன்றை இழந்துவிட்டது?" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)