லவ் பிலிம்ஸ் வழங்கும், லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் பிரபல இயக்குநர் ஜி. அசோக் இயக்கியுள்ள படம் ‘உஃப் யே சியாபா’. இது ஒரு நகைச்சுவை-த்ரில்லர் படம், எந்த வசனங்களும் இல்லாமல் நகைச்சுவைகள் மற்றும் இசையை மட்டும் நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் நடிகர்கள் சோஹம் ஷா, நுஷ்ரத் பருச்சா, நோரா ஃபதேஹி, ஓம்கார் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 5, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படம் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறுகையில், “இந்தபடத்தில் பணிபுரிவது சவாலானதாகவும், சுதந்திரமாகவும் இருந்தது.
பெரும்பாலான படங்களில், வசனங்கள் முன்னுரிமை பெறுகின்றன, இசை ஒரு படி பின்வாங்குகிறது, ஆனால் இங்கே, இசையே கதையின் ஒரு பகுதியாக இருக்கிறது. இசை முக்கிய கதைசொல்லலை இயக்கும் இது போன்ற வாய்ப்புகள் அரிதானவை. புதிய பாணிகளைப் பரிசோதிப்பதை நான் உண்மையிலேயே ரசித்தேன்,
குறிப்பாக இந்த நகைச்சுவை-த்ரில்லர் வகை படமாக இருந்தது கூடுதல் சவாலாகவும் இருந்தது” என்றார்.
Follow Us