fwaa

Advertisment

'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 8.15 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்குள்ளானது. இந்தகோரவிபத்திற்குள்ளானவிமானம் இரண்டு துண்டுகளாக உடைந்தது. இந்த விமானத்தில்10 குழந்தைகள் உட்பட சுமார் 180 பயணிகளும், விமான ஊழியர்களும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் பயணித்துள்ளனர். இதுவரை ஒரு குழந்தை உள்பட 18பேர் உயிரிழந்திருப்பதாக கேரளசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...

"அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என் பிரார்த்தனைகள்.. இதுவும் கடந்து போகும்.. #ஏர்இந்தியா என கூறியுள்ளார்.