/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/292_10.jpg)
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பல வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர் முருகதாஸ். தமிழைத் தாண்டி இந்தியிலும் வெற்றிப் படங்களை இயக்கியிருந்தார். கடைசியாக ரஜினியை வைத்து 'தர்பார்' படம் இயக்கியிருந்த நிலையில் அடுத்து அவர் இயக்கும் படம் பற்றிய அறிவிப்பு நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 25ஆம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனால் இப்போது அதன் ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது மனைவியுடன் கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். அங்கு பெருமாள் கோவிலில் தன் மனைவியுடன் சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு அவருக்கும் அவரது மனைவிக்கும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தள பக்கத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)