தந்தை மகன் இருவருக்கும் வாழ்த்து சொன்ன ஏ.ஆர் முருகதாஸ்!

hdhddnd

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களைவிட அதிக இடங்களைத் திமுக கைப்பற்றியதையடுத்து, தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இதில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மாபெரும் வெற்றிபெற்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும், முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கும் பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. அந்த வகையில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில்...

vhjugj

"மாபெரும் வெற்றிபெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், எங்கள் திரைத்துறையில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கவிருக்கும் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்
Subscribe