fhrdhde

'தர்பார்' படத்துக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து அந்தப் படம் சில காரணங்களால் கைவிடப்பட்ட நிலையில், முருகதாஸ் இதுவரை எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்துவருகிறார்.

Advertisment

இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக குரங்கை மையமாக வைத்து ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் அந்தப் படம் உருவாகவுள்ளதாகவும், இந்தப் படத்தைப் பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.