Advertisment

“தமிழக அரசிடம் மன்னிப்பு கேட்க முடியாது” - ஏ.ஆர். முருகதாஸ்

சர்கார் படத்தில் இலவசங்களை விமர்சித்த காரணத்திற்காக ஏ.ஆர். முருகதாஸ் மீது தேவராஜ்என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதனால் முருகாதாஸ் கைது செய்யாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் கோரி இருந்தார். இன்று நடந்த இவ்வழக்கில், “அரசின் நலத்திட்டங்களை விமர்சித்தற்காக தமிழக அரசிடம் மன்னிப்பு கேட்க முடியாது. இனி வரும் படங்களில் விமர்சிக்க மாட்டேன் என்று உத்தரவாதமும் தர முடியாது. படத்தில் காட்சிகளை அமைப்பது எனது கருத்து சுதந்திரம்” என்று ஏ.ஆர் முருகதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

டிசம்பர் 13ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதுவரை இயக்குனர் முருகதாஸை கைது செய்ய தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம்.

sarkar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe