"நான் அனைவரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால்.." - ஏ.ஆர் முருகதாஸ் வருத்தம்!

gaga

தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் ஏ.ஆர் முருகதாஸ், கரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருந்து வருகிறார். இவர் அடுத்ததாக விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கிடையே ஏ.ஆர் முருகதாஸ் சமீபத்தில் அளித்த வீடியோ பேட்டி ஒன்றில் பாலிவுட் திரையுலகம் குறித்து பேசியுள்ளார். அதில்...

"பாலிவுட் திரைத்துறையோடு ஒப்பிடும்போது இங்கு தமிழ்த் திரைத்துறையில் முறையான செயல்பாடு என்பது இல்லை. பல இடங்களில் கடன் வாங்கிப் படம் எடுப்பது. அதன் நஷ்டத்தை ஈடுகட்ட இன்னொரு படம், பின் இன்னொரு படம் என்று எடுக்கப்படுகின்றன. நான் அனைவரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால் இப்படிப் படம் எடுப்பவர்கள் டோலிவுட்டில் நிறையப் பேர் இருக்கிறார்கள். இதனால் நமது துறை பொருளாதார ரீதியில் ஒழுங்கான வளர்ச்சி அடையவில்லை என்று நான் நினைக்கிறேன். படைப்பாற்றலைப் பொறுத்தவரை இங்கு அபரிமிதமாக இருக்கிறது. திரைப்பட ஆர்வம் இருக்கும் பல தயாரிப்பாளர்கள் இருந்தாலும் அவர்களால் சரியாகப் படம் எடுக்க முடிவதில்லை. ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். உடனே நான் அங்கு ஆதரிக்கிறேன், இங்கு விரோதி என்றெல்லாம் இல்லை. நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் கற்றுக் கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்
Subscribe