பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

A.R. Murugadoss

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ், பாலிவுட் தயாரிப்பாளர் ஓம் பிரகாஷ் பட்டுடன் இணைந்து '1947' என்கிற பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தை பொன் குமரன் இயக்குகிறார். கன்னடத்தில் பிரபல இயக்குநரான இவர், தமிழில் 'சாருலதா' என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் ரஜினிகாந்த நடிப்பில் உருவான 'லிங்கா' திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்.

தற்போது, இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 5 மொழிகளில் உருவாகும் படம் என்பதால் நடிகர், நடிகை தேர்வில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பானது விரைவில் தொடங்க உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க திட்டமிட்டுள்ள அடுத்த படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளதாகவும் விரைவில் முருகதாஸின் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என்கின்றனர் நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள்.

A.R. Murugadoss
இதையும் படியுங்கள்
Subscribe