
ஜேஸன் மாமோவா, கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸின் மூலம் உலகம் முழுதும் பிரபலமடைந்தவர். தற்போது டிசி திரைப்படங்களில் அக்குவா மேனாக நடித்து வருகிறார்.
தற்போது அக்குவா மேன் 2 படத்தில் நடித்து வரும் ஜேஸன், யோகா குறித்து பேசியுள்ளார். அதில், “சில நாட்களுக்கு முன்பு யோகா பயிற்சியை மேற்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் செய்த விஷயங்களில் மிக, மிகக் கடினமானது அதுதான். என்னால் ஒரு காரை இழுத்து விட முடியும். எல் கேபிடன் மலையை எளிதில் ஏறிவிட முடியும். ஆனால் இரண்டு மணி நேரம் யோகா செய்வது எனக்கு மிகவும் கடினம். என்னால் குனிய முடியவில்லை. தசைகள் இறுகிவிட்டன.
‘கோனான் தி பார்பேரியன்’ படத்துக்காக நான் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தேன். அதற்காக யோகா வகுப்புக்கு சென்றபோது வயதான பெண்மணிகள் மூன்று பேர் தங்கள் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி யோகா செய்து கொண்டிருந்தனர். ஆனால், அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.