Advertisment

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை குறித்து பரவிய வதந்தி... மருத்துவர்கள் விளக்கம்! 

sp jananathan

'இயற்கை', 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், நேற்று (11.03.2021) மயங்கிய நிலையில் வீட்டில் காணப்பட்டார். உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.ஜனநாதன், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில், அவர் மரணமடைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

Advertisment

இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவர்களிடம் நாம் விசாரித்தபோது, “மூளை ரத்தக்கசிவு காரணமாக நேற்று அப்பல்லோ மருத்துவமனையின் அவசரப்பிரிவில் இயக்குநர் ஜனநாதன் அட்மிட் செய்யப்பட்டார். பொது மருத்துவர் ரமா நரசிம்மன்தான் இரவில் ஆரம்பக்கட்ட சிகிச்சை அளித்தார். தற்போது, ஜனநாதனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அதேநேரத்தில், தீவிர அறுவை சிகிச்சை செய்யலாமா என்றுமூளை அறுவை சிகிச்சை நிபுணர் சீனிவாசன் பரமசிவம் தலைமையிலான டாக்டர்கள் ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள்” என விளக்கம் அளித்தனர்.

Advertisment

sp jananathan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe