Advertisment

'எங்க வீட்டு மாப்பிள்ளை' அபர்ணதியுடன் இணையும் இசையமைப்பாளர்! 

தற்போது பிசி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கும் ஜி.வி பிரகாஷ் அடுத்ததாக அங்காடித்தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன் படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஓல்டு மகாபலிபுரம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அரங்கமைப்பில் பூஜையுடன் இன்று தொடங்கியது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’ நாயகன் பாண்டி, ஆர்யாவுடன் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான அபர்ணதி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். இவர்களுடன் ஜெனிஃபர், மணிமேகலை, பாகுபலி வில்லன் பிரபாகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இன்று தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisment
arya engavettumapillai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe