Skip to main content

"ரொம்ப எமோஷனலான மொமெண்ட் இது" - அபர்ணா தாஸ்

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

aparna das speech at kavin dada trailer launch event

 

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாடா'. கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடிக்கிறார். 'முதல் நீ முடிவும் நீ' புகழ் ஹரிஷ், ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் மூன்று பாடல்கள் மற்றும் டீசர் முன்னதாக வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

 

இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இதையொட்டி இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. 

 

கதாநாயகி அபர்ணாதாஸ் பேசுகையில், “கதாநாயகியாக நான் நடித்த முதல் தமிழ் படம் இது என்பதால் எனக்கு எமோஷனலாக இருக்கிறது. கேரளாவுக்கு வந்து கதை சொன்னதில் இருந்து படம் முடியும் வரை எனக்கு உறுதுணையாக நின்ற என் இயக்குநர் கணேஷூக்கு நன்றி. என்னை இயக்குநரிடம் அறிமுகப்படுத்தியது கவின்தான். கவின் இல்லை என்றால் இந்தப் படத்தில் நான் இல்லை. தமிழ் சினிமாவில் இது என் சிறந்த தொடக்கமாக இருக்கும்” என்றார்.  

 

நடிகர் கவின் பேசுகையில், ”நான்கு வருடங்களாக ‘டாடா’ படத்திற்காக நாங்கள் திட்டமிட்டோம். இத்தனை வருடங்களும் நாங்கள் இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என்றுதான் உழைத்தோம். பிரதீப், பாலு நாங்கள் அனைவருமே கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். என் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கைதான் இவ்வளவு தூரம் படத்தைக் கொண்டு வந்துள்ளது. எனக்குத் தெரிந்த பாபு இவ்வளவு மெச்சூர்டான கண்டெண்ட் யோசிப்பானா என்பது தெரியாது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் இந்தப் படத்தை ஒத்துக் கொண்டதற்கு நன்றி" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கவின் படத்தில் நயன்தாரா!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Nayanthara in Kavin movie

லிப்ட், டாடா, ஸ்டார் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வளர்ந்து வரும் ஹீரோவாக வலம் வருகிறார் கவின். இதில் ஸ்டார் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இப்படத்தை அடுத்து இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் ‘ப்ளடி பெக்கர்’ (Bloody Beggar) என்ற தலைப்பில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘மாஸ்க்; படத்தில் கவினோடு இணைந்து ஆன்ரியா, பாலசரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் வி.கர்ணன் அசோக் இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடும்  இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கவின் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் கவின் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.  லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கீரின் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்தில், நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

‘அறம் செய்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Aram sei audio launch

தாரகை சினிமாஸ் தயாரிப்பில் பாலு எஸ்.வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "அறம் செய்". நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது

இந்நிகழ்வினில் நடிகர் ஜீவா பேசியதாவது “பாலு எஸ்.வைத்தியநாதன் இந்தப்படத்தின் நாயகன், இயக்குநர் ஒன் மேன் ஆர்மி மாதிரி செயல்பட்டு தன் மனதிலிருந்ததைப் படமாக எடுத்துள்ளார். மிக இளகிய மனதுக்காரர் நல்ல மனிதர். தயாரிப்பாளர் ஸ்வேதா மேடத்திற்கு நன்றி. ஹீரோயின் மேகாலி நல்ல நடிகை, நன்றாக டான்ஸ் ஆடியுள்ளார், அவருடன் எனக்கு ஒரு நல்ல சாங்க் இருக்கிறது எனச் சொல்லிவிட்டு பாலு சார் அவரே தனியாக போய் டான்ஸ் ஆடிவிட்டு வந்துவிட்டார். பரவாயில்லை, மேகாலி மிகத் திறமையான நடிகை, அஞ்சனா கீர்த்தி, அவரும் நன்றாக நடித்துள்ளார். ஜாக்குவார் தங்கம் மிகச் சர்ச்சையான வசனங்கள் பேசி நடித்துள்ளார். 

இயக்குநர் கடைசி வரை கதையே சொல்லவில்லை அவர் சொன்னதைத் தான், எல்லோரும் செய்துள்ளோம். பயில்வான் அண்ணன் நல்ல கேரக்டர் செய்துள்ளார் அவருடன் நடித்தது நல்ல அனுபவம். என்னைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறார் சும்மாவாச்சும் ஏதாவது என்னைப் பற்றிச் சொல்லி விடுங்கள் நன்றாக இருக்கும். வெற்றி அண்ணன் வில்லனாக நடித்திருக்கிறார். நாங்கள் பார்த்தவரைக்கும் சாவித்திரி மேடத்தின் அன்பான அழைப்பில் தான் இந்த விழாவிற்கு வந்தேன். இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.