Advertisment

விஜய் டான்ஸ், சிரிக்க வைத்த மீம்ஸ் - 'பீஸ்ட்' குறித்து நடிகை அபர்ணா தாஸ் பேட்டி 

Aparna Das

Advertisment

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அபர்ணா தாஸ் பீஸ்ட் படம் குறித்து நக்கீரன் ஸ்டூடியோவிற்கு அளித்த நேர்காணல் பின்வருமாறு,

"விஜய் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு என்று ஒரு போன் கால் வந்தது. அப்போது நான் வெறும் 2 படங்களில் மட்டுமே நடித்திருந்தால் அந்த போன் கால் மீது எனக்கு சந்தேகமாக இருந்தது. இன்ஸ்டாகிராமில் என்னுடைய போட்டோவை பார்த்துவிட்டு கூப்பிட்டிருக்கிறார்கள் என்று பின்புதான் தெரியவந்தது. இந்தப் படத்தில் நடிக்க உங்களுக்கு விருப்பம் இருந்தால் மேலும் சில போட்டோக்களை அனுப்புங்கள் என்றார்கள். விஜய் சார் படத்தில் நடிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது? நான் உடனே அவர்களுக்கு போட்டோ அனுப்பி வைத்தேன்.

பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டே ரொம்பவும் ஜாலியாக இருக்கும். 100ஆவது நாள் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோல ரெடின் கிங்ஸ்லி அண்ணா என்னை பார்த்துக்கொண்டு இருப்பார். அதை வைத்து எங்கள் இருவரையும் சேர்த்து லவ் பாட்டெல்லாம் போட்டு நிறைய மீம்ஸ் வந்திருந்தது. அதைப் பார்க்கும்போதே சிரிப்பாகவும் சந்தோசமாகவும் இருந்தது. என்ட்ரி லெவல் நடிகையாக இருக்கும் என்னை மக்கள் கவனிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள் என்பது ரொம்பவும் ஹேப்பியான விஷயம்.

Advertisment

நேரில் பார்க்கும்போது விஜய் சார், படத்தில் பார்ப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்டவராக இருப்பார். அவர் டான்ஸ் ஆடுவதை பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கும். அவர் டான்ஸ் ஆடுவதற்கு முன்பு ப்ராக்டீஸ் பண்ணி நான் பார்த்ததே இல்லை.

நான் இதுவரை மலையாளத்தில் நடித்த படங்களெல்லாம் சின்ன சின்ன குடும்ப படங்கள்தான். இப்போதுதான் முதன்முறையாக உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பெரிய படத்தில் நடித்திருக்கிறேன். அதுவே எனக்கு வித்தியாசமான ஃபீல் தருகிறது". இவ்வாறு நடிகை அபர்ணா தாஸ் தெரிவித்தார்.

actor vijay Beast
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe