/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/28_12.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் 'பொன்னியின் செல்வன்', பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் 'சர்தார்' ஆகிய படங்களில் கவனம் செலுத்திவருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதேபோல, சர்தார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை படக்குழு நிறைவுசெய்துள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தை நிறைவு செய்துவிட்டு சர்தார் படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கார்த்தி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்தார் படத்திற்கு முன்னதாக இயக்குநர் முத்தையா இயக்கும் படத்தில், கார்த்தி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்டப்பணிகளில் இயக்குநர் முத்தையா முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் முத்தையா - கார்த்தி கூட்டணியில் உருவாகும் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர், 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் சூர்யாவிற்கு கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முத்தையா படத்தை நிறைவுசெய்துவிட்டு சர்தார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பைத் தொடங்கும் முடிவில் கார்த்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)