AP International films Theatrical Release Worldwide legend movie

Advertisment

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தை ஜே.டி - ஜெரி ஆகியோர் இயக்குகின்றனர். இப்படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விவேக், பிரபு, யோகிபாபு, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

ஜூலை 28 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழகவெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இப்படத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியீடும்உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமானஏ.பி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.