Advertisment

கர்ப்பகாலத்தில் தலைகீழாக நின்று யோகா -அனுஷ்கா ஷர்மா அதிரடி!

anuska

இந்தி திரையுலகில் பிரபலநடிகை அனுஷ்காஷர்மா. இவருக்கும், இந்தியகிரிக்கெட் அணியின்தற்போதைய கேப்டன்விராட்கோலிக்கும்கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது அனுஷ்கா ஷர்மாகர்ப்பமாக உள்ளார். வரும் 2021 ஜனவரியில், தங்களுக்கு குழந்தை பிறக்குமெனகோலியும்அனுஷ்காஷர்மாவும் கூறியிருந்தனர்.

Advertisment

இந்தநிலையில், கர்ப்பகாலத்தில் தலைகீழாக நின்று சிரஸாசனம் செய்யும்ஒருபடத்தைபகிர்ந்துள்ளார். அது சிறிதுகாலத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படமாகும். தனதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில், அப்புகைப்படத்தை பகிர்ந்துள்ள அனுஷ்கா ஷர்மா,இந்த பயிற்சி மிகவும் கடினமான ஒன்றாகும்” எனகுறிப்பிட்டுள்ளார்.

Advertisment

மேலும் அனுஷ்காசர்மா, "யோகாஎனதுவாழ்க்கையில்பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, நான் ஒரு கட்டத்திற்கு பிறகு, கர்ப்பகாலத்திற்கு முன்பு செய்தஆசனங்களை, அதிகமாக திரும்புதல் மற்றும் முன்னோக்கி வளைதல்ஆகியவைகளைதவிர்த்துவிட்டு, உரிய துணையோடுதற்போதும் செய்யலாம் எனஎனதுடாக்டர் பரிந்துரைத்தார். நான் பல வருடங்களாக செய்து வரும் இந்த சிரஸாசனதை, தற்போது செய்யசுவரை துணையாககொண்டேன். மேலும் எனதுகணவர்,கூடுதல் பாதுகாப்பிற்காகநான்பேலன்ஸ் செய்ய துணை புரிகிறார். இந்த சிரஸாசன பயிற்சி எனதுயோகாகுருவின்வீடியோ மூலம் கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது. இந்த கர்ப்பகாலத்திலும், நான் பயிற்சியை தொடர்வதைஎண்ணி மகிழ்ச்சியடைகிறேன்" எனகூறியுள்ளார்.

அனுஷ்கா ஷர்மா, கர்ப்பகாலத்தில் தலைகீழாக நின்று பயிற்சிசெய்ததை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் சிலர்,கர்ப்பகாலத்தில் டாக்டரும், யோகாமாஸ்டரும் அருகில் இல்லாதபோது, இது மாதிரியான பயிற்சிகள் செய்வதைதவிர்க்கவேண்டும். ஏனெனில் இதுபோன்றபயிற்சிகளில் அசம்பாவிதம் ஏற்பட்டால் அது குழந்தையைபாதித்துவிடும் எனகண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

anushka sharma virat kholi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe