Skip to main content

கர்ப்பகாலத்தில் தலைகீழாக நின்று யோகா -அனுஷ்கா ஷர்மா அதிரடி!

Published on 01/12/2020 | Edited on 01/12/2020
anuska

 

 

இந்தி திரையுலகில் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா. இவருக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக உள்ளார். வரும் 2021 ஜனவரியில், தங்களுக்கு குழந்தை பிறக்குமென கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் கூறியிருந்தனர்.

 

இந்தநிலையில், கர்ப்பகாலத்தில் தலைகீழாக நின்று சிரஸாசனம் செய்யும் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். அது சிறிது காலத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படமாகும். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அப்புகைப்படத்தை பகிர்ந்துள்ள அனுஷ்கா ஷர்மா,  இந்த பயிற்சி மிகவும் கடினமான ஒன்றாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் அனுஷ்கா சர்மா, "யோகா எனது வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, நான் ஒரு கட்டத்திற்கு பிறகு, கர்ப்பகாலத்திற்கு முன்பு செய்த ஆசனங்களை, அதிகமாக திரும்புதல் மற்றும் முன்னோக்கி வளைதல் ஆகியவைகளை தவிர்த்துவிட்டு, உரிய துணையோடு  தற்போதும் செய்யலாம் என எனது டாக்டர் பரிந்துரைத்தார். நான் பல வருடங்களாக செய்து வரும் இந்த சிரஸாசனதை, தற்போது செய்ய  சுவரை துணையாக கொண்டேன். மேலும் எனது கணவர், கூடுதல் பாதுகாப்பிற்காக  நான் பேலன்ஸ் செய்ய துணை புரிகிறார். இந்த சிரஸாசன பயிற்சி எனது யோகா குருவின் வீடியோ மூலம் கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது. இந்த கர்ப்பகாலத்திலும், நான் பயிற்சியை தொடர்வதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்" என கூறியுள்ளார்.

 

அனுஷ்கா ஷர்மா, கர்ப்பகாலத்தில் தலைகீழாக நின்று பயிற்சி செய்ததை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் சிலர், கர்ப்பகாலத்தில் டாக்டரும், யோகா மாஸ்டரும் அருகில் இல்லாதபோது, இது மாதிரியான பயிற்சிகள் செய்வதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் இதுபோன்ற பயிற்சிகளில் அசம்பாவிதம் ஏற்பட்டால் அது குழந்தையை பாதித்துவிடும் என கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொறுப்புடன் ஆடிய கோலி; சிலிர்த்தது சின்னசாமி மைதானம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
rcb vs kkr ipl live score update kohli played important knock

ஐபிஎல் 2024 இல் 10 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்த கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூர் அணியை முதலில் பேட் செய்யுமாறு அழைத்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் கேப்டன்  டூப்ளசிஸ் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு கேமரூன் கிரீன் கோலியுடன் இணைந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிரீன் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த மேக்ஸ் வெல்லும் கோலியுடன் இணைந்து அதிரடியில் மிரட்டினார். ஆனால் அந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 28 ரன்களை எடுத்து நரேன் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ராஜத் பட்டிதார் மீண்டும் ஏமாற்றினார். 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அனுஜ் ராவத்தும் 3 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ஒருபுறம் வீரர்கள் தவறான ஷாட்டுகளால் ஆட்டம் இழந்த போதிலும் மறுபுறம் விராட் கோலி எப்போதும் போல தனக்குரிய பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் எப்போதும் போல தன்னுடைய பினிஷிங் அதிரடியை காட்டினார். 8 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் எடுத்தார். கோலி 59 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கி 3.5 ஓவர்களிலேயே 52 ரன்களுடன் அதிரடியாக ஆடி வருகிறது.  சால்ட் 12 பந்துகளில் 24 ரன்களும், நரைன் 11 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இந்த ஆட்டத்தில் 83 ரன்கள் எடுத்ததன் மூலம், விராத் கோலி இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த எடுத்துள்ள வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றுக் கொண்டார். 

Next Story

கிரிக்கெட் மட்டுமல்ல எல்லாத்துலயும் ‘நம்பர் 1’ தான்; விராட்டின் புதிய சாதனை

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Not just cricket but 'No. 1' in everything; Virat's new record

 

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரரும் அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி நடப்பு தொடரில் 639 ரன்களை விளாசியுள்ளார். அதில் 2 சதங்களும் அடக்கம். 139 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 53.25 சராசரியுடன் நடப்பு சீசனில் அவர் விளையாடியுள்ளார். 

 

மேலும் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதமடித்தவர் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். இதுவரை விராட் 7 சதங்களை பதிவு செய்துள்ளார். இரண்டாம் இடத்தில் கிறிஸ் கெயில் 6 சதங்களை அடித்துள்ளார். தொடர்ந்து அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலிலும் விராட் முதலிடத்தில் உள்ளார். 

 

ஐபிஎல் தொடரில் இருந்து அவரது அணி வெளியேறிய பின் தற்போது அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது லண்டன் சென்றுள்ள அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தன்னை முழுமூச்சில் தயார்படுத்தி வருகிறார். 

 

ப்ளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெறவில்லை என்றாலும் கூட இரண்டு நாட்கள் இணையத்தை கலக்கினார் கோலி. தற்போது அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் 1601 பதிவுகளுடன் 250 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்றுள்ளார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்கிற பெருமையைப் பெறுகிறார்.