அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி, பாகமதி என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் தனக்கென இடத்தை பிடித்திருக்கும் நடிகை அனுஷ்கா. ஹீரோயின் சப்ஜக்ட் என்றாலே அது அனுஷ்காதான். இயக்குனர்கள் இவருக்காகவே கதைக்களத்தை அமைப்பார்கள். அதேபோல் படங்களும் வெற்றியடையும். அனைத்து நடிகைகளிடமும் முப்பது வயதை தாண்டிவிட்டால் அனைவரும் கேட்க கூடிய கேள்வி கல்யாணம் எப்போது என்றுதான். 36 வயது நிரம்பிய அனுஷ்கவிடமும் அதே கேள்வியைதான் கேட்டார்கள். ஆனால் அனுஷ்கா இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.
அவர் கடைசியாக நடித்து வெளியான பாகமதியும் ஓரளவுக்கு மக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால் அதற்கு பின் அவருக்கு சரியானபட வாய்ப்புகள் அமையவில்லை. திடீரென ஆன்மிக பயணம் செய்யத்தொடங்கிவிட்டார் அனுஷ்கா. சமீபத்தில் கேதார்நாத்திற்கு ஆன்மிக சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ளார். தற்போது ரசிகர்கள் அனுஷ்காவுடன் கேதார்நாத்தில் எடுத்தபுகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் அனுஷ்கா நெற்றியில் சந்தனம் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்துள்ளார்.
இந்த ஆன்மிக பயணம் திருமணத்திற்கா, பட வாய்ப்பிற்கா அல்லது அனுஷ்கா ஆன்மிகத்தில் முழுவதுமாக ஈடுபடப்போகிறாரா, என்ற பல கேள்விகள் எழுகின்றன. இதுகுறித்து அனுஷ்காதான் கூறவேண்டும்.