Advertisment

உடல் எடையை குறைக்க அனுஷ்கா தவிப்பு... வைரலாகும் புகைப்படம்...

அனுஷ்கா, தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். கதாநாயகிகளுக்கு முக்கியத்தூவம் கொடுக்கும் அருந்ததி, பாகமதி உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். பாகுபலி படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பலராலும் பாராட்ட பெற்றது.

Advertisment

anushka

ஆர்யாவுடன் இணைந்து நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் இவர் உடல் பருமன் கொண்டவர் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்காக உடல் எடையை இரு மடங்காக ஏற்றினார். இதனை தொடர்ந்து அனுஷ்காவில் எடை கூடிக்கொண்டே போகிறது. பாகுபலி படத்தில் கூட இவரை உடல் மெலிந்தவராக காட்ட படக்குழு மிகவும் சிரமப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது.

Advertisment

கடைசியாக அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் வந்தது. அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லை. உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருந்ததால் அனுஷ்காவை ஒதுக்கினர். இதனால் கடும் உடற்பயிற்சிகள் செய்து எடை குறைந்து ஒல்லியான தோற்றத்துடன் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது செம வைரலானது.

alt="zombi" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="e3b55980-2a85-4de0-a17d-00b07c1aed7b" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/zombi-336x150_7.jpg" />

அதன்பிறகு நிசப்தம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். 4 இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீசுக்கும் நடக்கும் கிரைம் திகில் படமாக தயாராகி உள்ளது. அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் அனுஷ்கா ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மீண்டும் உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருக்கிறார். உடற்பயிற்சிகளால் எடையை குறைக்க முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.

anushka shetty kollywood
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe