'பழைய தோற்றத்துக்கு வந்த பிறகு சினிமாவில் நடிப்பேன்' - அனுஷ்கா நம்பிக்கை 

anushka shetty

'பாகமதி' படத்துக்கு பிறகு புதிய படங்கள் எதிலும் நடிக்காமல் தன் குண்டு உடம்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நடிகை அனுஷ்கா தன் எதிர்கால சினிமா வாழ்க்கை குறித்து பேசியபோது...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

“நான் கதாபாத்திரத்துக்காக எவ்வளவு உழைக்கவும் தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு நான் தான் முதல் அடையாளம் என்கிறார்கள். என்னை நம்பி இந்த மாதிரி கதாபாத்திரங்களை கொடுத்த இயக்குனர்களுக்கு நான் நன்றி. இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டி நடித்தேன். கூட்டிய எடையை குறைப்பது அவ்வளவு சுலபம் இல்லை. எடையை குறைக்கும் முயற்சியில்தான் இப்போது ஈடுபட்டு இருக்கிறேன். முன்பு மாதிரியான தோற்றத்துக்கு வந்த பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். எனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. எடையை குறைத்த பிறகு நடிக்க வேண்டும் என்று எதையும் ஒப்புக்கொள்ளவில்லை" என்றார்.

anushka shetty
இதையும் படியுங்கள்
Subscribe