Published on 22/12/2018 | Edited on 22/12/2018

உடல் எடை கூடியது காரணமாக பாகமதி படத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்து நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கிவிடுவார் என்று பரவாலாக பேசப்பட்ட நிலையில் தற்போது பிரபாசுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், கோனா வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்கிடையே சில காலம், தான் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் தன்னுடைய உடல் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தற்போது அறிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கும் அனுஷ்காவுக்கு தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.