Published on 06/05/2020 | Edited on 06/05/2020

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை அனுஷ்காவை இன்ஸ்டாகிராமில் பின் தொடருவோர் எண்ணிக்கை 3 மில்லியத்தை கடந்துள்ளது. இதற்காக நடிகை அனுஷ்கா நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில்..''உங்கள் அனைவரின் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவுக்கு எப்போதும் நன்றி. நீங்கள் அனைவரும் பொறுப்புடன் வீட்டில் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.