Advertisment

அனுஷ்காவின் சகோதரரை கொல்ல சதித்திட்டம்!

AnushkaShetty brother gunaranjan shetty faces death threats

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அனுஷ்கா ஷெட்டி தமிழ், தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவரதுசகோதரர் குணரஞ்சன் ஷெட்டி. இவர்ஜெய கா்நாடக அமைப்பின் தலைவராக இருந்து மறைந்த முத்தப்பா ராயின்நெருங்கிய ஆதரவாளராக இருந்து வந்தார்.

Advertisment

இந்நிலையில், குணரஞ்சன் ஷெட்டியை கொலை செய்ய சதி திட்டம் நடப்பதாக கூறிஜெய கர்நாடக அமைப்பின் நிர்வாகிகள் மாநில உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும், அதில் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து குணரஞ்சன் ஷெட்டி தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்படுவதாகவும், அதனால் கவனமாக இருக்கும்படி காவல்துறையை சேர்ந்த ஒருவர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

Advertisment

குணரஞ்சன் ஷெட்டியை போன்றேமுத்தப்பா ராயின்ஆதரவாளராக இருந்தவர் மன்வித ராய். இவருக்கும்குணரஞ்சன் ஷெட்டிக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் மன்வித ராய்தான் கொலை செய்ய திட்டம்தீட்டியிருப்பார்என்று சொல்லப்பட்ட நிலையில், இதனைமுழுவதுமாக அவர் மறுத்துள்ளார். மேலும் இது குறித்து போலீஸ் முழுமையாக விசாரணை நடத்தினால் உண்மை வெளிச்சத்திற்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

karnataka Bengaluru anushka shetty
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe