உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வருவதால் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பலரும் இரவு, பகல் பாராது கடினமாக உழைத்து வருகின்றனர். இதற்கிடையே அவ்வப்போது மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆங்காங்கே தாக்கப்படுவதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ள நிலையில் இதை, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா கண்டித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-13_0.jpg)
''கரோனாநோயாளிகள் மற்றும் அவர்களைக் கவனித்துக்கொள்வதில் முன் வரிசையில் இருக்கும் சில மருத்துவ வல்லுநர்களைத் தரக்குறைவாக நடத்தப்படுவதாக வரும் செய்திகளைப் படிக்கும்போது மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது. இது போன்ற நேரங்களில் நாம் ஒருவருக்கொருவர் அக்கறை கொள்வது மிகவும் முக்கியம். சக குடிமக்களை அவமதிக்காமலும், அவர்களுக்குக் களங்கம் ஏற்படுத்தாமலும் நடந்து கொள்வோம். ஒற்றுமையாக நிற்க வேண்டிய நேரம் இது" எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)