Skip to main content

கிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டும் மனைவி அனுஷ்கா!

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
 

virat kohli

 

 

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 66 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 743 லிருந்து 748 ஆக அதிகரித்துள்ளது. இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பிரபலங்கள் வீட்டில் என்னென்ன செய்கிறார்கள் என்பதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் விராத் கோலிக்கு அவருடைய மனைவி அனுஷ்கா ஷர்மா முடி வெட்டி விடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், “ கிச்சன் கத்தரியால் எனக்கு முடி வெட்டுகிறார். அற்புதமான ஹேர் கட் செய்துள்ளார் என் மனைவி,"  என்று தெரிவித்துள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொறுப்புடன் ஆடிய கோலி; சிலிர்த்தது சின்னசாமி மைதானம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
rcb vs kkr ipl live score update kohli played important knock

ஐபிஎல் 2024 இல் 10 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்த கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூர் அணியை முதலில் பேட் செய்யுமாறு அழைத்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் கேப்டன்  டூப்ளசிஸ் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு கேமரூன் கிரீன் கோலியுடன் இணைந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிரீன் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த மேக்ஸ் வெல்லும் கோலியுடன் இணைந்து அதிரடியில் மிரட்டினார். ஆனால் அந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 28 ரன்களை எடுத்து நரேன் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ராஜத் பட்டிதார் மீண்டும் ஏமாற்றினார். 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அனுஜ் ராவத்தும் 3 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ஒருபுறம் வீரர்கள் தவறான ஷாட்டுகளால் ஆட்டம் இழந்த போதிலும் மறுபுறம் விராட் கோலி எப்போதும் போல தனக்குரிய பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் எப்போதும் போல தன்னுடைய பினிஷிங் அதிரடியை காட்டினார். 8 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் எடுத்தார். கோலி 59 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கி 3.5 ஓவர்களிலேயே 52 ரன்களுடன் அதிரடியாக ஆடி வருகிறது.  சால்ட் 12 பந்துகளில் 24 ரன்களும், நரைன் 11 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இந்த ஆட்டத்தில் 83 ரன்கள் எடுத்ததன் மூலம், விராத் கோலி இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த எடுத்துள்ள வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றுக் கொண்டார். 

Next Story

கிரிக்கெட் மட்டுமல்ல எல்லாத்துலயும் ‘நம்பர் 1’ தான்; விராட்டின் புதிய சாதனை

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Not just cricket but 'No. 1' in everything; Virat's new record

 

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரரும் அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி நடப்பு தொடரில் 639 ரன்களை விளாசியுள்ளார். அதில் 2 சதங்களும் அடக்கம். 139 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 53.25 சராசரியுடன் நடப்பு சீசனில் அவர் விளையாடியுள்ளார். 

 

மேலும் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதமடித்தவர் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். இதுவரை விராட் 7 சதங்களை பதிவு செய்துள்ளார். இரண்டாம் இடத்தில் கிறிஸ் கெயில் 6 சதங்களை அடித்துள்ளார். தொடர்ந்து அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலிலும் விராட் முதலிடத்தில் உள்ளார். 

 

ஐபிஎல் தொடரில் இருந்து அவரது அணி வெளியேறிய பின் தற்போது அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது லண்டன் சென்றுள்ள அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தன்னை முழுமூச்சில் தயார்படுத்தி வருகிறார். 

 

ப்ளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெறவில்லை என்றாலும் கூட இரண்டு நாட்கள் இணையத்தை கலக்கினார் கோலி. தற்போது அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் 1601 பதிவுகளுடன் 250 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்றுள்ளார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்கிற பெருமையைப் பெறுகிறார்.