Advertisment

''சேதத்தைப் பார்க்கையில் மனம் உடைகிறது'' - அனுஷ்கா சர்மா இரங்கல்!

ga

கரோனா பாதிப்பு நெருக்கடிக்கு மத்தியில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை 'அம்பன்' புயலாக மாறி வடமேற்குத் திசை நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே நேற்று ஆக்ரோஷமாகக் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது 155 - 165 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் பல மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.

Advertisment

மேலும் புயலுக்கு இதுவரை 72க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இதற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தற்போது இந்திய கேப்டன் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா அம்பன் புயல் சேதம் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''அம்பன்' சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தைப் பார்க்கையில் மனம் உடைகிறது. ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது பிரார்த்தனைகள்! பலியானவர்களின் அனைத்து குடும்பங்களுக்கும் என் மனமார்ந்த இரங்கல்'' என பதிவிட்டுள்ளார்.

Advertisment

amphan cyclone anushka sharma
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe