பாலிவுட் நட்சத்திரமும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Advertisment

anushka

அனுஷ்கா ஷர்மா நீச்சல் உடையில் இன்ஸ்டாவில் ஒரு புகைப்படம் ஒன்றை லேட்டஸ்ட்டாக பதிவிட்டுள்ளார். இவர் கடைசியாக நடித்த படம் ஜீரோ. ஷாருக் கானுடன் ஜோடியாக இப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் முடிய இருக்கிறது. ஆனால், தற்போதுவரை வேறு எந்த படத்திலும் நடிக்கவும் கமிட்டாகாமல் உள்ளார். அதற்கு பதிலாக தனது குடும்பத்துடனும் கணவர் விராட்டுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

Advertisment

இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. அதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது. விராட் கோலியுடன் அனுஷ்கா சர்மாவும் சென்றுள்ளார்.

அப்போது கரீபியன் பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். இதற்கு விராட் ஹோலியும் ஹார்ட்டின் ஸ்மலியை கமெண்ட் செய்திருந்தார். அதனால் இந்த விஷயம் வைரலாகி வருகிறது. இதுவரை 17 லட்சம் பேர் இப்புகைப்படத்தை லைக் செய்துள்ளனர்.

Advertisment