Advertisment

அனுஷ்காவின் 'நிசப்தம்' எதில் வெளியாகும் என்பதைத் தெரிவித்த தயாரிப்பாளர்!

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைலன்ஸ்’. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருந்தது. தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

Advertisment

வசனமே இல்லாமல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் பணிகள்அனைத்தும் முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பரவலால் இதன் ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகிறது, நேரடியாக திரையரங்கில் மட்டும்தான் வெளியாகிறது என்று இருதகவல்கள் வெளியாகி பலரை குழப்பி வந்தது. இந்நிலையில் ரிலீஸ் குறித்து வதந்திகள் உலவிக் கொண்டே இருந்த நிலையில் தயாரிப்பாளர் கோனா வெங்கட் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியுள்ளது.

’நிசப்தம்’ வெளியீடு குறித்து ஊடகங்களில் நிறைய யூகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. திரையரங்கில் வெளியிடுவதற்குத் தான் நாங்கள் அதிக முக்கியத்துவம் தருகிறோம் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நீண்ட நாட்கள் சூழ்நிலை அந்த முடிவுக்குச் சாதகமாக இல்லையென்றால், அப்போது ஓ.டி.டி. தளத்தை வெளியிடுவதற்கான மாற்றாகப் பார்ப்போம். நல்லது நடக்கும் என நம்புவோம் என்று தெரிவித்துள்ளார்.

anushka shetty
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe