Advertisment

பிரம்மாண்ட தயாரிப்பாளருடன் இணைந்த அனுஷ்கா

anushka next movie update now

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் அனுஷ்கா,தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் கவனம் செலுத்திவருகிறார்.அவர் நடிப்பில் ஏற்கனவே வெளியான ‘அருந்ததி’, ‘பாகமதி’ உள்ளிட்ட படங்கள்ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அனுஷ்கா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

அதன்படி நடிகை அனுஷ்கா பிரபல தயாரிப்பு நிறுவனமான யூ.வி. கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று (07.11.2021) வெளியானது. ‘பாகமதி’, ‘சாஹோ’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களைத் தயாரித்துள்ள யூ.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் இயக்குநர் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'ராதே ஷியாம்' படத்தைதயாரித்துவருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகை அனுஷ்கா நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளது.

Advertisment

'அனுஷ்கா 48' என இப்படத்திற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர்மகேஷ் பாபு இயக்கவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.படத்தின் இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வில் கவனம் செலுத்திவருகிறது.

radhe shyam uv creations anushka shetty
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe