Advertisment

பிக்பாஸ்-3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அனுஷ்கா?

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழகம், ஆந்திரா, கேரளா என அனைத்து மாநிலங்களிலும் நன்கு ஒளிபரப்பாகிறது. பிக்பாஸ் நடக்கும் நூறு நாட்களிலும் அதற்கென தனி ரசிகர்கள் உள்ளனர். தமிழில் நடிகர் கமல் ஹாசன் இரண்டு சீசனிலும் தொகுத்து வழங்கினார். தெலுங்கில் முதல் சீசன் ஜூனியர் என்.டி.ஆர், இரண்டாவது சீசன் நானி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். தற்போது தமிழில் கமல்ஹாசன் அரசியலில் இறங்கிவிட்டதால் இந்த சீசனில் அவர் தொகுத்து வழங்கமாட்டார் என்று சொல்லப்படுகிறது. அதைபோன்று ஜூனியர் என்.டி.ஆர் ஆர்.ஆர்.ஆர். படத்தில் பிஸியாக இருப்பதாலும், நானியும் பிஸி என்பதால் பிக்பாஸ்-3யை யார் தொகுத்து வழங்குவார்கள் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

anushka

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

பாகுபலி படத்திற்கு பிறகு உடல் எடை கூடியதை தொடர்ந்து சிகிச்சை பெற்று உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார் அனுஷ்கா. உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை என்று உடல் எடையை அனுஷ்கா குறைத்தார் என்று திரைத்துறை வட்டாரங்களில் பேச்சு எழுந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு படவாய்புகள் வந்துக்கொண்டிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனை நடத்துவது குறித்து அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திரா, தெலுங்கானாவில் அனுஷ்காவுக்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் அவரை அணுகி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவன தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

anushka shetty bigboss junior ntr
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe