Advertisment

மிக உயரத்திலிருந்து கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டாரா அனுஷ்கா?

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வந்தவர் நடிகை அனுஷ்கா. கடைசியாக பாகுமதி படம் கடந்த வருடம் ஜனவரியில் திரைக்கு வந்தது. அதன்பிறகு அவருக்கு படங்கள் வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார். உடல் எடையை அதிகமானதே அவருக்கான பட வாய்ப்புகள் தட்டிப்போனதற்கு காரணமாக சொல்கின்றனர்.

Advertisment

anushka

அதன்பின் வெளிநாடு சென்று சிகிச்சை செய்துகொண்டு பழைய தோற்றத்துக்கு திரும்பினார். தற்போது மாதவன் ஜோடியாக ‘சைலன்ட்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் இது தயாராகிறது. அமிதாப்பச்சன், சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்திலும் நடிக்கிறார்.

Advertisment

இதன் ஷூட்டிங் ஆந்திராவில் நடைபெற்றபோது அனுஷ்கா உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து கால் எலும்பு முறிந்ததாகவும் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சில நாட்கள் ஓய்வில் இருந்தார் என்றும் தகவல் வெளியானது. இதனால் நடிகர்-நடிகைகள் பலர் அனுஷ்காவை தொடர்புகொண்டு உடல் நலம் குறித்து விசாரிக்க தொடங்கினர்.

ரசிகர்களும் சமூகவலைதளத்தில் அனுஷ்காவிடம் நலம் விசாரித்தார்கள். இதைத்தொடர்ந்து அனுஷ்கா தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் உடல் நலத்தோடு ஆரோக்கியமாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

anushka shetty
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe