Published on 10/11/2018 | Edited on 10/11/2018

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான ரெண்டு படத்தில் இணைந்து நடித்த நடிகர் மாதவனும், அனுஷ்காவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையில் இப்படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி உள்ளது. 'சைலன்ஸ்' என பெயரிட்டுள்ள இப்படத்தை ஹேமந்த் மதுகர் இயக்கவுள்ளார். கோனா வெங்கட் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அமெரிக்காவில் தொடங்க உள்ளது. படத்தின் கதை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. மாதவன், தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கி, நடித்து வருகிறார்.