ஆடுகளம், வந்தான் வென்றான், காஞ்சனா-2, ஆரம்பம், வை ராஜா வை ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் டாப்ஸி. ஆனால், இவர் பாலிவுட்டில்தான் மிகவும் பிரபலமாக இருக்கிறார். தற்போது மீண்டும் தமிழில் ‘கேம் ஓவர்’ என்னும் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

நயன்தாரா நடித்த மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் இந்தி விநியோகஸ்த உரிமையை பிரபல பாலிவுட் இயக்குநரும், இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவருமான அனுராக் காஷ்யப் கைப்பற்றியிருக்கிறார்.
இறுதி சுற்று, விக்ரம் வேதா, தமிழ்படம் 2 வெற்றிகளை தொடர்ந்து ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து `கேம் ஓவர்' என்ற படத்தை தயாரித்துள்ளனர்.
ரான் ஈதன் யோஹன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பையும், சிவா சங்கர் கலைப் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.