anurag kashyap

சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து பல சர்ச்சைகள் உருவாகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் அனுராஜ் காஷ்யப் சுஷாந்தின் மேலாளருடனான உரையாடலை வெளியிட்டுள்ளார்.

Advertisment

புகைப்படத்தை பகிர்ந்து, “இதை பகிர்வதற்கு மன்னித்துவிடுங்கள். சுஷாந்த் இறந்த மூன்று வாரங்களுக்கு முன் நடந்த உரையாடல் இது. 22 மே அன்று சுஷாந்தின் மேலாளருடன் நடந்த உரையாடல். இப்போது பகிரவேண்டிய தேவை உள்ளதாக நினைக்கிறேன். எனக்கான காரணங்களுக்காக நான் அவருடன் பணியாற்ற விரும்பவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

சுஷாந்த்இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது. "உங்களுக்கு இப்படி நடிகர்களைப் பரிந்துரை செய்வது பிடிக்காது என்று எனக்கு தெரியும். ஆனால், என்னால் உங்களிடம் அதை செய்ய முடியும் என நினைக்கிறேன். சுஷாந்த் உங்கள் திரைப்படத்தில் பொருந்துவார் என நினைத்தால் தயவுசெய்து அவரை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு ரசிகனாக, நீங்கள் இருவரும் சேர்ந்து ஓர் அற்புதத்தை உருவாக்குவதை பார்க்க விரும்புகிறேன்" என்று சுஷாந்த் மேனேஜர் கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த அனுராக், "அவர் மிகவும் சிக்கலான மனிதர். அவர் நடிக்க வருவதற்கு முன்னாலிருந்தே, 'கை போ சே' படம் ஆரம்பிப்பதற்கு முன்னாலிருந்தே எனக்கு அவரைத் தெரியும்" என்று கூறியுள்ளார்.

பின்னர், சுஷாந்த் இறந்த அன்று அவருடைய மேனேஜருடன் நடைபெற்ற உரையாடலையும் அனுராக் பகிர்ந்துள்ளார். "ஜூன் 14 அன்று மேலாளருடன் நடந்த உரையாடல். நீங்கள் பார்க்க விரும்பினால் அதில் சில விஷயங்கள் உங்களுக்கு புலப்படும். இதை செய்வது கடுமையானதாக இருக்கிறது. ஆனால், என்னால் இதை பகிராமல் இருக்க முடியாது. மேலும் அவரது குடும்பத்துக்காக நாங்கள் கவலைப்படவில்லை என்று சொன்னவர்களும் இதை பார்க்கலாம். எவ்வளவு உண்மையாக இருக்க முடியுமோ அவ்வளவு உண்மையாக பகிர்கிறேன். என்னைப் பற்றி நீங்கள் தீர்மானம் செய்ய வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள்" என்று புகைப்படத்தை பதிவிட்டு அனுராக் கூறியுள்ளார்.