/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/305_18.jpg)
நடிகர் விஜய் சேதுபதி 'குரங்கு பொம்மை' இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகும் இப்படத்திற்கு அஜ்னீஸ் லோக்நாத் என்பவர் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படம் விஜய் சேதுபதியின் 50வது படம் எனவும் படத்திற்கு 'மகாராஜா' எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும்கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் நடிப்பதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பாக விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் அனுராக் கஷ்யப் வில்லனாக நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக விஜய் சேதுபதி படத்தில் அவர் நடிக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)