/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/148_19.jpg)
பா.ரஞ்சித், 'விக்டிம்' என்ற ஆந்தாலஜி படத்தை தொடர்ந்து தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'யாழி ஃபிலிம்ஸ்' மற்றும் 'நீலம் ப்ரொடக்ஷன்ஸ்' இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் 'ஏ' சான்றிதழுடன் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் சிறப்பு காட்சி மும்பையில் நடைபெற்றது. இந்த சிறப்பு காட்சியில் பிரபல இந்தி பட இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை நந்திதா தாஸ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தை பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப் பா.ரஞ்சித்தைக் கட்டிப்பிடித்துப் பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
அனுராக் காஷ்யப், இதற்கு முன்பு தமிழ் இயக்குநர்கள் பாலா, அமீர், சசிகுமார் மற்றும் தியாகராஜன் குமாரராஜா போன்ற இயக்குநர்களின் படங்களைப் பார்த்துபாராட்டியுள்ளார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)