Advertisment

“1 மணி நேரத்திற்கு 5 லட்சம்” - கண்டிஷன் போட்ட இயக்குநர்

Anurag Kashyap fixed a rate for his meeting

பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். தமிழில் விஜய் சேதுபதியின் இமைக்கா நொடிகள் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த லியோ படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். இப்போது விஜய் சேதுபதியின் மகராஜா, சுந்தர்.சி-யின் ஒன் டூ ஒன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து ஜி.வி பிரகாஷை வைத்து தமிழ் மற்றும் இந்தியில் ஒரு படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், தன்னிடம் சந்திப்பு மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கவுள்ளதாக அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “எனக்கு மெசேஜோ அல்லது ஃபோனிலோ யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம். என்னுடன் சந்திப்பு மேற்கொள்ள பணம் செலுத்துங்கள் உங்களுக்கான நேரம் கிடைக்கும்” என பதிவிட்டுள்ளார். மேலும், “நான் புதிய நபர்களுக்கு உதவி செய்து நிறைய நேரத்தை வீணடித்திருக்கிறேன். தான் மேதாவி என நினைத்து கொண்டிருக்கும் நபர்களைச் சந்தித்து இனிமேல் எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

Advertisment

எனவே நான் இப்போது சந்திப்பு மேற்கொள்ள பணம் வாங்குகிறேன். 10-15 நிமிடத்திற்கு 1 லட்சமும் அரை மணி நேரத்திற்கு 2 லட்சமும், 1 மணி நேரத்திற்கு 5 லட்சமும் வசூலிக்கிறேன். இந்த தொகைக்கு நீங்கள் உடன்பட்டால் என்னை அழைக்கலாம் அல்லது கொஞ்சம் தள்ளியே இருங்கள். ஆனால் பணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

anurag kashyap
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe