
கடந்த ஜூன் 14ஆம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து பாலிவுட்டில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. தற்போது சுஷாந்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சுஷாந்தின் காதலியான ரியாவை போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சுஷாந்திற்கு ஆதரவாக ஒரு கூட்டமும், நடிகை ரியாவுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும் சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஏன் ரியாவுக்கு ஆதரவு தருகிறேன் என்று அனுராக் காஷ்யப் விளக்கமளித்துள்ளார். அதில், "ரியாவுக்குத் தண்டனை தர வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். அவர் இதை செய்யவில்லை என்று எப்படி தெரியும் சுஷாந்துக்கு ரியாவால் என்ன பிரச்சனை என்பது உனக்கு எப்படி தெரியும்? என்றெல்லாம் கேட்டு வருகின்றனர். அவர்கள் ஒரு விஷயத்தை மறந்துவிட்டனர். கடந்த 9-10 வருடங்களாக சுஷாந்துடன் பேசி, உரையாடி வருகிறோம். ஆம்! எங்களுக்கு விஷயம் அதிகமாக தெரியும்.
அதனால்தான் இவ்வளவு நாட்களாக, சுஷாந்தின் மீதான மரியாதையால், மொத்த திரையுலகமும் அமைதியாக இருந்தது. ஆனால், இப்போது, சுஷாந்தை பற்றி எங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் எங்களை ஒன்று சேர்த்து, ரியாவுக்காக ஆதரவு தர வைத்திருக்கிறது. ஏனென்றால் விஷயம் எல்லை மீறிச் சென்றுவிட்டது" என்று கூறியுள்ளார்.