கடந்த 2014ஆம் ஆண்டு அனுராதா என்ற படத்தில் நடித்த நடிகை திஷா சவுத்ரி. இவர் தனது கணவருடன் சேர்ந்து பெங்களூருவில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம், வீடு கட்டித்தருவதாக விளம்பரம் செய்து பொதுமக்களிடம் இருந்து ரூ.375 கோடி வரை வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு வீடு கட்டி தரவில்லை.

disha chowdry

வீடு கட்டித்தருவதாக ரூ. 375 கோடி மோசடி செய்த நடிகை!

Advertisment

இதுதொடர்பாக 3,700-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை மோசடி செய்ததாக திஷா சவுத்ரி மற்றும் அவரது கணவர் மீது 82 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு திஷா சவுத்ரி, அவரது கணவர் சச்சின் நாயக் மற்றும் பார்ட்னர் அனுப் ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன்பின் போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து திஷாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

Advertisment

ஆனால், அதன்பின்பு போலீஸ் கண்ணில் படாமல் இரண்டு வருடங்களாக வேறு வேறு விளாசத்தில் மறைந்து வழ்ந்து வந்த திஷாவை தற்போது மும்பையில் கைது செய்துள்ளனர் போலீஸார்.