Skip to main content

பும்ராவும் நானும் காதலிக்கிறோமா? பதிலளித்த நடிகை அனுபமா!

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

பிரேமம் படத்தில் சுருள் முடியுடன் நடித்த அனுபமா பரமேஸ்வரனுக்கு தென்னிந்தியாவில் ரசிகர்கள் ஏராளம். மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இவர்.
 

anupamma

 

 

இந்நிலையில் நடிகை அனுபமாவும், இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் காதலிக்கின்றனர் என்று சமூக வலைதளத்தில் பரவலாக தகவல் பரவியது. அதற்கு காரணம் என்ன என்றால் பும்ரா பின் தொடரும் ஒரு சிலரில் அனுப்பமா மட்டுமே நடிகை வேறு எந்த நடிகையும் அவர் பின் தொடரவில்லை. அதேபோல அனுப்பமா, பும்ரா பதிவிடும் அனைத்து பதிவுகளையும் ரிட்வீட் செய்கிறார். இதுபோன்ற விஷயங்களை வைத்து இருவரும் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக காதலித்து வருகின்றனர் என்று தகவல் பரவி வந்தது. 
 

இந்நிலையில் நடிகை அனுபமா இதுகுறித்து ஒரு பேட்டியில், “நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை. இருவரும் நல்ல நண்பர்களே” என்று கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பும்ரா மீது அதிருப்தி; ஹர்திக் பாண்டியா குறித்து விளக்கம் கேட்கத் தயாராகும் பிசிசிஐ!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

hardhik pandya and jasprit bumrah

 

2021 ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலககோப்பை போட்டியில், கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி, அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி,ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

 

இந்தநிலையில் இந்த தோல்வியால் பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் முழு உடல் தகுதி இல்லாததால் ஐபிஎல்-லில் பந்து வீசாமல் இருந்த ஹர்திக் பாண்டியா, தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்படாமல் இந்திய உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்தும், இந்திய அணியில் அவர் தொடர்ந்து இடம்பெற்றது குறித்தும் தேர்வு குழுவிடமும், அணி நிர்வாகத்திடமும் பிசிசிஐ விளக்கம் கேட்கவுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் ஹர்திக் பாண்டியா நீக்கப்படவுள்ளார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே பும்ரா மீதும் பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பிறகு அணி வீரர்களுக்கு ஓய்வு தேவை என பும்ரா கூறியது பிசிசிஐக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர், "பயோ-பபிள் சோர்வைப் பொறுத்தவரை, ஐபிஎல்லில் விளையாடுமாறு வீரர்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை. விராட் அல்லது ஜஸ்பிரிட் உலகக் கோப்பை மிகவும் முக்கியமானது என்று நினைத்திருந்தால், அவர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகியிருக்கலாம். பிசிசிஐ அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது. குடும்பத்தினர் அவர்களுடன் இருக்கவும் அனுமதித்துள்ளது" என கூறியுள்ளார்.

 

 

Next Story

"ஐபிஎல்-க்கு பிறகு அணி சோர்வாக இருக்கிறது" - தோல்விக்கு பிறகு உண்மையை உடைத்த பும்ரா!

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

bumrah

 

2021ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை போட்டிகள், நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் படுதோல்வியடைந்து, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் கட்டத்தில் உள்ளது.

 

இந்தநிலையில், தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, இந்திய அணி சோர்வாக இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்திய அணி சோர்வாக இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த பும்ரா கூறியதாவது, "நிச்சயமாக. சில நேரங்களில் நமக்கு ஓய்வு தேவை. குடும்பத்தைப் பிரிந்து இருந்துவருகிறோம். ஆறுமாதங்களாக தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் இருக்கிறோம். இவை அனைத்தும் சில சமயங்களில் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் களத்தில் இருக்கும்போது, அதையெல்லாம் நாங்கள் நினைப்பதில்லை. கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பதும், குடும்பத்தை நீண்ட நாட்கள் பிரிந்திருப்பதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

 

பிசிசிஐயும் எங்களை சௌகரியமாக வைத்துக்கொள்ள தங்களால் முடிந்தவரை முயற்சி செய்தது. இது கடினமான நேரம். ஒரு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே நாங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் சில நேரங்களில் கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் ஏற்படும் சோர்வு, மன சோர்வு போன்றவை ஊடுருவுகிறது." இவ்வாறு பும்ரா தெரிவித்துள்ளார்.

 

ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலிருந்து, இந்திய வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.