Advertisment

“மோசமான விமர்சனம் எழுந்தால் படத்தை பார்க்காதீங்க” - அனுபமா பரமேஸ்வரன்

50

தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் அனுபமா பரமேஸ்வரன், கடைசியாக மலையாளத்தில் ‘ஜே.எஸ்.கே.’ படத்தில் நடித்திருந்தார். இப்பட்ம சென்சார் போர்டில் எதிர்ப்பை சம்பாதித்து கடந்த மாதம் 17ஆம் தேதி வெளியாகியிருந்த நிலையில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தமிழில் கடைசியாக டிராகன் படத்தில் நடித்திருந்தார். 

Advertisment

இந்த நிலையில் முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள படம் ‘பரதா’. இப்படம் தெலுங்கு மற்றும் மலையாளத்த்ல் உருவாக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப் செய்யாமல் இரண்டு மொழிகளில் மட்டுமே வருகின்ற 22ஆம் தேதி வெளியாகிறது. ஆனந்த மீடியா தயாரித்துள்ள இப்படத்தை பிரவீன் கந்த்ரேகுலா இயக்கியுள்ளார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரனைத் தாண்டி, தர்ஷனா ராஜேந்திரன், சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் சமந்தா கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

ட்ரெய்லரை பார்க்கையில், ஒரு கிராமத்தில் பாதி முகம் மறைத்தபடி பர்தா அணியும் வழக்கத்தை கொண்டிருக்கும் பெண்கள், அந்த பர்தாவால் எந்தளவு சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை பேசும் படமாக தெரிகிறது. இந்த நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகளில் அனுபமா ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தால் பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “விமர்சகர்களுக்கு பணம் கொடுக்கும் நோக்கம் எங்களுக்கும் இல்லை. அதற்கான வசதியும் இல்லை. இந்த படத்திற்கு வரும் விமர்சனங்கள் அனைத்தும், உண்மையாக மக்கள் மனதில் இருந்து வருபவை. அதனால் விமர்சனங்கள் நன்றாக இருந்தால் திரையரங்குக்கு வந்து படத்தை பாருங்கள். இல்லையென்றால், தவிர்த்துவிடுங்கள்” என்றுள்ளார்.   

anupama parameshwaran Movie review
இதையும் படியுங்கள்
Subscribe